வெள்ளி, 11 ஏப்ரல், 2014

ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வீணாகின்றன...?.



வெளியூர் வாக்குகள் வேண்டாமா...????

வெளியூர்களில் வேலைசெய்பவர்கள் ஏராளமானோர் இருக்காங்க... அவங்க எல்லாருக்குமே ஒரே ஒருநாள்தான் தேர்தலுக்கு விடுப்பு இருக்கு... ஏகப்பட்ட பணம் செலவு செஞ்சு, பலகிலோமீட்டர் தொலைவு கடந்து வந்து, அவங்க அவங்க ஜனநாயகக் கடமையை நிலை நாட்டவேண்டுமா என்ற சலிப்பில் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வீணாகின்றன....

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்ற, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை(ELECTORS PHOTO IDENTITY CARD) இருப்பவர்களுக்கு தபால் ஓட்டுப் போட தேர்தல் கமிஷன் வழிவகை செய்தால் என்ன...??? தேவையற்ற அலைச்சல், வாக்குகள் வீணாவது இவை எல்லாம் தவிர்க்கப்படுமே...???

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர் எண், தொகுதி எண், பாகம் எண்..தொடர் எண் எல்லாம் குறிப்பிட்டு., அவரவர் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள , வாக்குச்சாவடியில் வாக்களிக்க வழி செய்யலாம்...

முடியுமா என்றால்...கண்டிப்பாக முடியும்..20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பட்டனைத் தட்டி வாக்குப் பதிய முடியும் என்று நாம் நினைத்திருப்போமா...??இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வெற்றிகரமாகத் தேர்தலை நடத்த முடியும்போது நான் சொன்ன இந்த யோசனையை செயல்படுத்த முடியாதா நம் தேர்தல் கமிஷனால்...??

அரசியல் கட்சிகள் இந்த யோசனையை ஏன் தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கக்கூடாது...??? பிரண்ட்ஸ் உங்க கருத்துகளை சொல்லுங்க... நான் சொன்னதில் என்ன என்ன சிரமங்கள் வரக்கூடும் என்று யோசிச்சுச் சொல்லுங்க ...ப்ளீஸ்..