வியாழன், 10 ஏப்ரல், 2014

வெற்றிகொண்டார்கள் - அடக்கியாளவில்லை


ராஜந்திரசோழனுக்கு பிறகு அவனது வாரிசுகள் ராஜாதித்தன் வீரராஜேந்திரன் போன்றவர்கள் போரில் மரணமடைய மிகப்பெரிய பேரரசான் சோழசாம்ராஜ்யம் வாரிசற்று சிதறுண்டு போகும் நிலை வந்தபோது 

ராஜேந்திரனின் மகள் வயிற்றுப்பேரனும் கீழைச்சாளுக்கிய அரசன் ராஐநரேந்திரனின் மகனுமான ராஜேந்திரன் முதலாம் குலோத்துங்கசோழன் என்ற பெயருடன் பட்டமேறினான்.

உலகமெங்கும் புலிக்ககொடி பறக்க செய்தான் .பல முறை எச்சரித்தும் தமிழ் வணிகர்களுக்கும் பயணிகளுக்கும் தொடர்ந்து தீங்கிழைத்த கலிங்க மன்னனுக்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்தான் ..
எங்கெல்லாம் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் வாள்கரம் நீளும் என கர்ஜித்தான். அடங்காத கலிங்கத்து பீமனை அடக்க தன் தளபதியும் நண்பனுமான இளையபல்லவன் என்ற கருணாகர தொண்டைமான் தலைமையில் புலிக்கொடி ஏந்திய வீரசோழ படை கலிஙம் விரைந்தது தமிழனை இகழ்ந்தது எவ்வளவு தவறு என கலிங்கத்து மக்களும் மன்னனும் காலமும் நினைத்து கதறும் அளவு இருந்தது சோழ வேங்கைகளின் பாய்ச்சல் .
பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் தவிர எதிர்த்தவர் அனைவரும் நிர்மூலம் ஆக்கப்பட்டனர்.
கலிங்க தேசமே சூறையாடப்பட்டது .தமிழன் கோபம் என்ன என்பதை அண்டைய தேசங்கள் உணர்ந்து பணிந்தன. இந்தப்போரே குலோத்துங்கன் மீது புலவர் செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாட காரணமாக இருந்தது. 
அசோகரின் கலிங்கத்துப்போரை விரிவாக வரலாறில் கூறியவர்கள். என் பாட்டன் குலோத்துங்கனை ஏன் இருட்டடிப்பு செய்தார்கள் .உலகை கட்டியாண்ட என் இனம் ஏன் இன்று போகுமிடமெல்லாம் வதைபட்டுக்கொண்டுள்ளது.

நம் மன்னர்கள் அயல்நாடுகளை வெற்றிகொண்டார்களே தவிர அடக்கியாளவோ ஆதிக்கம் செலுத்துவோ முயலவில்லை .தமிழனின் இந்த பெருந்தன்மையே இன்று இளிச்சவாய் தனமாக கண்டுகொள்ளப்பட்டுவிட்டது