திருப்பூர் மாவட்டம் முத்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீ ராம்நகரில் விசித்திர வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.இக்கோயிலில் விஜய பால கணபதி சன்னதியும் சிம்ம மகா கணபதியும் உள்ளனர்.
சிம்ம மகா கணபதியை வணங்குவதால் பில்லி சூனியம் பெரும் பகை அகலும்.சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோகநரசிம்மர் அருள் பாலிப்பது போல், சிம்மமகா கணபதியின் பின்புறம் சிங்க முகம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ வீரம்மா முனிஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.இவரை வழிபடுவதால் சகல கண்டங்கள்,சத்ரு உபாதை கடன் நிவர்த்தி ஏற்படும்.மேலும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ வராகி தேவி மற்றும் ராமர் பாதுகை,துளசி மாதா ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள விசித்திர வீர ஹனுமாரை வெற்றிலை மாலை சாதி வழிபடுவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண தடை நீங்கும்.மேலும் அழகிய தோற்றத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவான் காட்சி தருகிறார்.
நோயற்ற வாழ்வு வாழ இவரை வழிபடலாம்.சகல யோக நிவாரணம்,தேக ஆரோக்கியம், சத்சந்தானம் ஆகியவை கிட்டும்.அடுத்து அன்னை ஸ்ரீ வாலாம்பிகை சன்னதி உள்ளது.இந்த அம்மனுக்கு கோயில் கிடையாது.நம் கண்ணுக்கு தெரியாத சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அன்னையை இங்கு தரிசனம் செய்யலாம்.பெளர்ணமி,அஷ்டமி,பூரம்,ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சன்னதியும் இங்குள்ளது.
இச் சன்னதியில் லட்சமி நரசிம்மர் தோற்றம் மிக அலைக்ய முறையில் அமைந்துள்ளது.லட்சுமியை மடியில் அணைத்தபடி நாகத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.ஸ்ரீ வீர நாகம்மாள் சன்னதியும் இங்குள்ளது.தேவர்களுக்கு யாக சாலையில் அளிக்கப்படும் அவிர்பாகம் திரவியங்களை அக்கினி மூலம் பதப்படுத்தி அந்தந்த தேவதைகளிடம் சேர்ப்பவள்
ஸ்ரீ வீர நாகம்மாள்.ராகு காலத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் சர்வ மங்கலம் கிட்டும். சிறப்பு மிக்க இக்கோயிலில் ஸ்ரீராமர் பட்டாபிசேக கோலம் உற்சவ மூர்த்திகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலை நிர்மாணித்த சுவாமி நரசிம்ம அடிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பூஜைகளை உரிய நேரத்தில் சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
பக்தர்களிடம் காணிக்கை எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்பது முக்கிய செய்தி. நரசிம்ம அடிகள் தனக்கென்று கோயில் அருகிலேயே ஓம்கார வடிவில் சமாதி எழுப்பியுள்ளார்.இதை படிக்கும் அன்பர்கள் கட்டாயம் ஒருமுறை சிறப்பு மிக்க முத்தூர் விசித்திர ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வரவும்.
வாழ்வாங்கு வாழ்க....
ஆலய தொலைபேசி 004257-255154…செல்-97878 66129