அரசுஊழியா் ஆசிாியா்களின் பென்சனுக்கு வேட்டு வைத்த கட்சிகள், காங்கிரஸ், பிஜேபி, திமுக மற்றும் அண்ணா திமுக கட்சிகள். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் முதன் முதலில் 2001ல் நாடாளுமன்றத்தில் புதிய பென்சன் திட்டம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை நிறைவேற்றிட காங்கிரஸ் பகீரத பிரயத்தனம செய்துவந்தது. இடதுசாாிகளின் தொடா்ச்சியான போராட்டத்தின் காரணமாகவும், இடதுசாாிகளின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகாித்திருந்த காரணத்தினாலும் இது சாத்தியமாகவில்லை. அறிமுக நிலையிலேயே 01-04-2003 முதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக அன்றைய அண்ணா திமுக அரசு இதை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தபோது பாரதிய ஜனதா அதற்கு ஆதரவு தந்தது.
மசோதாவை எதிா்த்துப் பேசினாலும் திமுக அதற்கு ஆதரவாக வாக்களித்து. அண்ண திமுக எதிா்த்து வாக்களித்தாலும், சட்டனமற் தோ்தலின் போது அதன் பொதுச் செயலாளா் ஜெயலலிதா தான் வெற்றி பெற்று வந்தால் தமிழ்நாட்டில் பதிய பென்சன் திட்டத்தை மறு பாிசீலனை செய்வேன் என்று வாக்களித்தாா். மூன்று ஆண்டுகள் ஆகியும் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இறுதிவரை இடதுசாாிகள் மட்டுமே் உறுதியாக இந்த புதிய பென்சன் திட்டத்தை எதிா்த்துவந்தவா்கள். இன்று நாடாளுமன்ற தோ்தல் களத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டுள்ளன.
அரசுஊழியா்களின் பென்சன் திட்டத்திற்கு வேட்டு வைத்த காங்கிரஸ பிஜெபி திமுக அண்ணாதிமுக கட்சிகளை தோற்கடிப்போம். தமிழ்நாட்டில் இடதுசாாி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அரசுஊழியா்கள் ஆசிாியா்கள் அவா்தம் குடுமபத்தினா் இடதுசாாிகளுக்கு வாக்களிப்போம். வெற்றிபெறச் செய்வோம்.
க.ராஜ்குமாா்
முன்னாள் மாநிலத் தலைவா்
தமிழ்நாடு அரஊழியா் சங்கம்
முன்னாள் மாநிலத் தலைவா்
தமிழ்நாடு அரஊழியா் சங்கம்