திங்கள், 24 மார்ச், 2014

"இவள் கனவுகளும் விற்பனைக்கு"



இரவு நேரம் மிதக்கத் தொடங்கியது,
கனவுலகின் கடைக்கோடியில்,
கதவருகே வாகாய் நின்று கொண்டு,
தூக்கத்தை விற்கத்தொடங்கினாள் அவள்...

வாடிக்கையாளர் கூட்டத்தை விட,
வேடிக்கையாளர் கூட்டம் மிகுதியாக,
விற்கப்படாத கவிதைப் புத்தகமென,
இவளும் வாசிக்கப்படாமல் கிடந்தாள்...

இரவு நேரத்தில்,
காதலைப் படிப்பவன் மூடனாவான்,
காமத்தைப் பயில்பவன் வேடனாவான்,
அப்படி ஓர் வேடனிடம்,
அடைபட்ட பறவையாய் மாறிக்,
கூண்டில் அடைபட்டாள் அவள்,
இன்னமும் வேடிக்கையாளர் கூட்டம் குறையவில்லை,

வேடன் பறவையை விற்றான்,
வாங்கியவனோ ஓர் கசாப்புக்கடைக்காரன்,
சதையை பிறருக்கு விற்கத்தொடங்கினான்,
வாடிக்கையாளர் கூட்டம் கூடத்துவங்கியது...