#அறுவடை முடிஞ்சி மொத்தம் 8 மூட்டை பச்சை மணிலாதான்(அதுவும் 16 சிப்பங்களாக கட்டினோம், ஈர மணிலா பளு அதிகம்)நானும் என் சித்தப்பாவும். ஊரின் கிழக்கில் இருக்கும் மணல்வெளி கொல்லையிலிருந்து ,ஏற்கனவே அறுவடையாகி காய்ந்து கொண்டிருக்கும் ஊருக்கு மேற்க்கே இருக்கும் களத்தில் அதனை சேர்க்க வேண்டும் இது தான் ப்ராஜெக்ட்.#
கட்டை வண்டி , வண்டி சக்கரம் மரத்தாலானது, ரெண்டு வெள்ளை மாடுகள்(எங்க குடும்ப உறுப்பினர்கள் தான்)நான் மற்றும் சித்தப்பா.வழியில் "மணல் ஓடை" 300 மீட்டர் அதைக்கடக்க வேண்டும் 50 மீட்டர் இழுத்த மாடுகள்51 ஆவதி மீட்டரில் திணர ஆரம்பித்தன, முட்டி போட்டு இழுத்து பார்த்தன, எனர்ஜி போதவில்லை, இரண்டு மாடுகளின் வாலையும் முறுக்கி வலிக்க்க்கச்செய்தேன் .சித்தப்பா சக்கரத்தை தள்ளினார்,வேறு ஆள் அரவமில்லை.மாடுகளை ஆசுவாசப்படுத்தி திரும்ப விரட்டினேன், மறுபடியும் முட்டி போட்டு இழுத்து தோற்றன#
# கோபத்தில் தார்குச்சியை(மூங்கிலின் நினியில் ஆணி செருகப்ப்ட்டு, வேறொரு இறந்த மாட்டின் தோலால் சாட்டை அதே நுனியில் கட்டப்பட்டிருக்கும்)எடுத்தேன் ஓங்கியதும் ,சித்தப்பா ஓடி வந்து தடுத்தார்.#
#மாடுகளிடம் ஏதோ பேசினார், அதன் கண்களை பார்த்தார், வண்டியின் பின் புறம் வந்துஒரு சிப்பத்தைவண்டியில் இருந்த என்னை தன் தலையில் ஏற்றச்சொன்னார்.அந்த சிப்பத்தை கொண்டு போய் இரண்டு மாடுகளின் க்ண்ணெதிரே தொப்பெனப் போட்டார்.மீண்டும் காதருகில் ஏதோ சொன்னார்#
#இப்போ ஓட்டுடா என்று எனக்கு ஆணையிட்டார்,பழையபடி சக்கரத்தை தள்ளப்போனார்.மாடுகள் இப்போ அதே தீவிரத்தில் இழுக்க ஆரம்பித்தன மீதி 250 மீட்டரைக் நால்வரும் எளிதில் கடந்தோம். வண்டியை சித்தப்பா நிறுத்த சொல்லி பூட்டை தரிக்க சொன்னார்(நுகத்தடியுடன் இணைக்கும் கயறு)மாடுகளின் கழுத்தை தடவி ,தடவி ஏதோ சொன்னார்#
#திரும்ப போய் இருவரும் ஓடையில் போட்ட அந்த சிப்பத்தை நெருங்கினோம்,சித்தப்பா என் தலையில் சிப்பத்தை ஏற்றி விட்டார் வண்டி நோக்கி நடந்தோம்,
நடக்கையில் "சிதப்பா மாடுகளிடம் பேசும் மொழியை சேர்ந்தே சுமந்தேன் மணிலா சிப்பம் பளு இழந்தது

படைப்பு:- Ramu Kathavarayan