வியாழன், 13 மார்ச், 2014

ஹிட்லர் எனும் இளிச்சவாயன்!.

நம் மக்களுக்கு புத்தன் ஏசு காந்தியை தெரிகிறதோ இல்லையோ ஹிட்லரை நன்றாகத் தெரியும். கொடூர மனம் படைத்தவர்களை, கொலைகாரர்களை அடையாளப்படுத்துகிற பல ஐகான்களில் ஹிட்லர்தான் டாப்பில் இருக்கிறார். ஒன்றா, இரண்டா, அறுபது லட்சம் யூதர்கள் அவர் காலத்தில் ஜெர்மனியில் கொன்றழிக்கப்பட்டார்கள்! ஆனால் பாருங்கள்! சரித்திரத்தில் அதைவிட அதிகமான எண்ணிக்கையில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. கிமு, கிபி களில் கணக்கெடுத்தால் இரண்டாம் உலகப்போரை விட அதிகமான உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

     இருப்பினும் ஏன் ஹிட்லர் ஒருவரை மட்டும் உலகம் பழித்துக் கொண்டே இருக்கிறது? முதல் உலகப்போரின் தோல்விக்கு பிறகு ஒரு துண்டு ரொட்டிக்காக ரேஷனில் க்யூவில் நின்று கொண்டிருந்த ஜெர்மானியர்களை, தன்னுடைய வெறும் பதிமூன்று வருட ஆட்சி காலத்தில் உலகத்தின் மாபெரும் வல்லரசின் பெருமை மிக்க குடிமக்களாக அடையாளம் காட்டிய  அடால்ஃப் ஹிட்லர் என்கிற மனிதன், உலகின் மிக மோசமான மனிதர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு எப்படி தள்ளப்பட்டார்

        பொறுமையாக பார்ப்போம்! அதற்கு முன் சில விஷயங்கள்......... மனிதனுடைய மனம் மிகப்பெரிய குப்பைத்தொட்டி. பிறந்ததிலிருந்து நிறைய குப்பைகளை அதில் கொட்டிக்கொண்டே இருக்கிறான். சோகம் என்னவென்றால் அவன் மட்டுமல்லாது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர், பகைவர், படித்தது, கேட்டது, பார்த்தது, உணர்ந்தது என ஏகப்பட்ட குப்பைகளை தன்னுள் சேர்த்துக் கொள்கிறான். அதை அப்படியே தன் அடுத்ததலைமுறைக்கும் கொடுத்து செல்கிறான்.

       இதன் விளைவு என்னவென்றால்...... "ஏம்பா! எதுக்கு சாமி கும்பிடுறே? சாமிய பார்த்துருக்கியா? "இல்லீங்க! என் தாத்தா காலத்துல இருந்து இதுதான் சாமி! நீ தப்பு செஞ்சா சாமி கண்ணக் குத்தும்னு சொல்லிருக்காங்க! அதனால கும்பிடுறேன்!" "ஹிட்லர கொலைகாரன்னு சொல்றியேகொடூரமான மனிதன்னு சொல்றியே! அது பத்தி உனக்கெதுவும் தெரியுமா?" "அதெல்லாம் தெரியாதுங்க! அவரு யூதர்களை படுகொலை செஞ்சாராம்! கொடூரமானவராம்! கால காலமா சொல்லிட்ருக்காங்க! அதான் நானும் சொல்றேன்நான் ஒன்னும் புதுசா சொல்லலியே!" இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது
      சில வரலாறுகள் சக்தியுள்ளவர்களின் கத்தி முனையில் எழுதப்படுகிறது! சக்தியுள்ளவன் என்ன சொல்கிறானோ அதுதான் வேதவாக்கு! சில தலைமுறைகளுக்குப் பிறகு வேதவாக்கு வரலாறாகிறது! வரலாறு அதை படிப்பவர்களால் பரப்பப்படுகிறது! இப்படிதான் ஹிட்லர், "இனப்படுகொலையாளன்" என சக்தியுள்ள நேச நாடுகளால் அடையாளம் காட்டப்பட்டார்!. நெப்போலியன் போனபார்ட், பல போர்கள் நடத்தி படுகொலைகள்  செய்யவில்லையா? அலெக்ஸாண்டர் தி கிரேட், தன் பெரும்படையுடன் பாதி உலகை குருதியால் நனைக்கவில்லையா? தன்னம்பிக்கைக்கு நெப்போலியனையும், மாவீரன் என்று அலெக்ஸாண்டரையும சொன்ன வரலாறு ஹிட்லரை கண்டு பயத்தால் நடுநடுங்கி கொலைகாரன், சர்வாதிகாரி என்று  புழுதி வாரித் தூற்றுகிறது! அதற்காக யூதர்களை கொன்றது நியாயமா
     இனப்படுகொலை செய்தது சரியா? சர்வ நிச்சயமாய் தவறு! ஹிட்லர் இந்த மாபெரும் தவறை செய்யாதிருந்தால் இன்று உலகத்தின் ஒப்பற்ற தலைவராயிருந்திருப்பார். அதைவிட நிச்சயமாய் அதை வரலாறு இந்த அளவு கொண்டாடியிருக்காது!
    தன் தேசத்தின்மீது அவருக்கு இருந்த அளவில்லாத பற்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தேசத்தை வல்லரசாக்கியது. இன்று ஷேவிங் செய்கிற பிளேடிலிருந்து ஆகாய விமானத்திலிருக்கிற எஞ்சின் பாகங்கள் வரை ஜெர்மனியின் தொழில்நுட்பம் பரவி கிடக்கிறதென்றால் அது "மூன்றாம் பேரரசு" காலத்தில் போடப்பட்ட விதைதான் காரணம்.
    
     ஆனால் யூதர்களின் மீது அவர் காட்டிய துவேஷம் அவர் கண்களை மறைத்தது. ஒரு பக்கம் ஜெட் வேகத்தில் நாடு முன்னேறுகிறது. மறுபக்கம் அதை விட வேகமாக இனப்படுகொலை நடக்கிறது. கடைசியில் ஒரு ஆளுமை மிக்க மனிதனின் சவக்குழியை அவனே தோண்டிக் கொண்டான்.
     
இப்போது விஷயத்திற்கு வருவோம்!
அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த இந்த இனப் படுகொலையின் மூலம் இந்த உலகம் கற்றுக் கொண்டது என்ன? யாராவது எதையாவது செய்தால் "ஹிட்லர் மாதிரி நடந்து கொள்கிறான்" என்று  பகடியாய் பேசுவதை தவிர வேறு எதையுமே இந்த உலகம் கற்றுக் கொள்ளவில்லை.

      ஒரு நாகரிகமான சமதர்ம சமுதாயத்தில் வாழ்வதாக பெருமை பேசிக் கொண்டிருக்கிற நாம், அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு  செத்துப் போனவனை குழியிலிருந்து தோண்டியெடுத்து இவனை மாதிரி வாழக்கூடாது என்று வெட்டிக் கதைகள் பேசுகிற நாம்நம் சமகாலத்தில் நடந்த ஈழ இனப் படுகொலையில் வரலாற்றின் வெறும் சாட்சிகளாகத்தான் இருக்கப் போகிறோமா?

      இரண்டாம் உலகப் போருக்குப்பின் இது போன்ற அழிவுகள்நடக்கக்கூடாது என்று ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்தது? ராஜபட்சேவுக்கு துணை போன சோனியாவையும், கருணாநிதியையும், இந்திய குடியரசையும் என்ன சொல்லியிருக்கிறோம்

    "யூதர்களை படுகொலை செய்த ஹிட்லரை நான் சந்திக்க மாட்டேன், அவரோடு கை குலுக்கி என் கையை ரத்தத்தால் கறை படுத்திக் கொள்ள மாட்டேன்" என்று சொன்ன இந்திய தலைவர்களை ஈன்றெடுத்த இந்த நாடு ஈழத்தமிழர்களின் ரத்தத்தை வெறி கொண்டு குடித்ததே! இதற்கென்ன சொல்லப் போகிறோம்? யூதர்களை விட எந்த விதத்தில் குறைந்து போய்விட்டனர் ஈழத்தமிழர்கள்?

    நமக்கு யாரென்றே தெரியாத யூதர்களை கொன்றவன் இனப்படுகொலையாளன்!
நம் தாயாதி பிள்ளைகளை கொன்றவன் நட்பு நாட்டுத் தலைவனாம்! அப்போ ஹிட்லரை மட்டும் ஏன் இப்படி கேவலமா பேசணும்?
என்ன காரணம்?
ஏன்னா......
இந்த கட்டுரையோட தலைப்பு தான் காரணம்!


==========================
==========================


விழிப்புணர்வு பதிவு எழுதுவரும் தங்களுக்கு...

ஒரு பொது வாக்காளார் வருகின்ற தேர்தலில்...

யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும்?. ஏன்?.

யாருக்கு அளிக்கக் கூடாது ஏன்?.

அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் புரிகின்ற 

வண்ணம் அரசியல் விழிப்புணர்வு படைப்புக்ளை 

இலக்கியவட்டம் இணைய இதழில் வெளியிட 
வரவேற்கிறோம்- கு.முருகபூபதி-9865046197