ஞாயிறு, 9 மார்ச், 2014

அரசியல் கட்டுரை - வெள்ளோட்டம்

இக் கட்டுரை https://m.facebook.com/nethransrikrishna அவர்களால் பகிரப்பட்டது ஆகும். 

   பொதுவாக தேர்தலில் நிற்பவர்கள் "இவருக்கு ஓட்டு போடுங்கள்""இவரை முதல்வராக தேர்ந்தெடுங்கள்" என்று யாரையாவது கை நீட்டுவார்கள். நமக்கு பிடித்தவராக இருந்தால் அவருக்கு, இல்லையென்றால் மாற்று அணியினருக்கு ஓட்டு போடுவோம்! இதுதான் வழக்கம்! 

   திருச்சி சிவா ஒரு பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கை காட்டுபவர்தான் பிரதமர் என்று பேசிய போதுதான் ஓட்டு போடும் வாக்காளர்களை திமுகவினர் எந்த அளவு கோமாளிகளாக நினைத்து வந்திருக்கின்றனர் என்பது புரிய வந்தது. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் கருணாநிதியின் பலவீனமும் கண்கூடாக தெரிந்தது. பிரதமர் வேட்பாளராக யாரை கை நீட்டுவார் கருணாநிதி?

"முதலில் எங்களுக்கு ஓட்டு போட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை அள்ளித்தாருங்கள்! பிறகு  பிரதமரை கருணாநிதி தேர்ந்தெடுப்பார்"திருச்சி சிவா சொன்னதன் அடிப்படை இதுதான். 
ஆனால் இந்த டெக்னிக் பழனி பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பிடம் வைத்து காசை வாங்கிக் கொண்டு "இந்த கக்கூஸ் காலியாயிருக்கு! இதுல போய்க்குங்க" என்று சொல்வதற்கு வேண்டுமானால் சரிப்படும்! பாராளுமன்ற தேர்தலிலெல்லாம் எடுபடாது!


    அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்தியிருந்தால், தன் குடும்பத்தை முன்னேற்ற எடுத்த அக்கறையில் ஒரு சதவீதம் நாட்டு மக்களுக்கு காட்டியிருந்தால், இந்நேரம் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டார். (ஏற்கனவே ஒரு வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வாய்ப்பு வந்த போது அதை தடுப்பதில் தனி அக்கறை காட்டியவரென்று ஊருக்குள் அவரைப் பற்றிய பேச்சு உண்டு! ) இதில் இவர் கை காட்டுபவர்தான் பிரதமர் என்பதை சிவா ஏதேனும் உள்குத்துடன் சொல்லியிருக்கிறார் என்று விட்டுவிட முடியாது! லிட்டர் கணக்கில் கசப்பு மருந்து குடித்து கொண்டிருக்கும், குடிக்கப் போகும் உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அது சரிப்படும்! பொது வாக்காளார்களுக்கு ஒத்துவராது! இப்போது பிரச்சினை அதுவல்ல!

     முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள் மீது பெரிய அளவு குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில் காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, ஈழத்தமிழர் விவகாரம், தூக்குதண்டனை கைதிகள் விடுவிப்பு போன்ற விஷயங்களில் கருணாநிதியின் திரைக்கதையில் ஜெயலலிதா வைத்த ட்விஸ்ட்டுகள் அவரை தமிழக மக்கள் மனங்களில் உயர்ந்த இடத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது!  
(நூலகம்,சட்டப் பேரவை இடமாற்றம் பிரச்சினைகள் மக்களை நேரடியாக பாதிக்கவில்லை! திமுக உடன்பிறப்புகள் மட்டும் அதை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரியதாக பில்டப் செய்தாலும் பொதுமக்களிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்)
மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, இதெல்லாம் முந்தைய ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் வந்தது என்பதை மக்கள் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. இல்லாவிட்டால் குறை கண்டுபிடிப்பதில் டாக்டர் பட்டம் வாங்கிய கருணாநிதியே குறை சொல்ல ஒன்றும் கிடைக்காமல் அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்கவே இல்லை என்று ஸ்கூல் பையன் லெவலுக்கு இறங்கி சொன்னதையெல்லாம் இந்த தமிழ்கூறும் நல்லுலகம் கண்டது!  (இதற்காக அவரை முகபுத்தகத்தில் டைம்டேபிள் போட்டு வறுத்தெடுத்தார்கள் என்பது தனி டிராக்! முகநூல் பதிவர்கள் ஏற்கனவே கலா ரேஞ்சுக்கு ஆடுபவர்கள். அவர்களுக்கு சலங்கை கட்டி விட்டால் என்னஆகும்?)


     தமிழகத்தில் தனியாரின் சில சர்வே முடிவுகள் கூட அதிமுக அமோக வெற்றி பெரும் என்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது!  
அப்புறம் ஏன் அவர்கள் தலைவி  பிரதமராகக் கூடாது?

ஒருவேளை மூன்றாம் அணி அமையும் பட்சத்தில் அவர் பிரதமராகலாம்! அல்லது அதற்கு பதிலாக பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைபட்டால் அவர்களுக்கு ஆதரவளித்து முக்கிய கேபினெட் அமைச்சரகங்களை கேட்டுப் பெறலாம்! இரண்டும் தமிழகத்திற்கு நல்லதுதானே!  இதற்கு முன் திமுக, பாஜக வுடன் ஆட்சி சுகத்தை அனுபவித்துவிட்டு, பின்பு அவர்களை கழட்டிவிட்டு காங்கிரஸுக்கு ஆதரவளித்தது! காங்கிரஸுடனும் சேர்ந்து கூட்டாக கொள்ளையடித்துவிட்டு, ஈழத்தில் இனப் படுகொலை நடத்த துணைபுரிந்துவிட்டு இனி தமிழகத்தில் இவர்களை நம்பினால் ஓட்டு கிடைக்காது என்று அவர்களையும் கழட்டி விட்டது! அதற்குபின்னும் கனிமொழிக்காக காங்கிரஸ் காலில் விழுந்ததெல்லாம் திமுக வின் மாஸ்டர் பிளாஸ்டர் நாடகங்கள்! கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் மத்தியில் பெவிகால் போட்டு அமர்ந்து விட்டு , "நான் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை அமைத்தேன், கழிப்பிட வசதி செய்து கொடுத்தேன் " என்று லோக்கல் கவுன்சிலர் செய்ய வேண்டிய வேலையை செய்து விட்டு நிலாவுக்கு ராக்கெட் விட்டது போன்ற அலப்பறை கொடுப்பது திமுக விற்கு கை வந்த கலை! ஆனால் நிஜமாகவே தமிழகத்திற்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை! அவர்கள் குடும்பம் சம்மந்தப்படாத, பொதுமக்கள் மட்டுமே பயனடைந்த ஏதேனும் திட்டத்தை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு சொப்பன சுந்தரியின் சோப்பு டப்பா ப்ரீயாக அனுப்பி வைக்கப்படும்.

         ஒரு வேளை உலகம் ரிவர்ஸில் சுற்ற ஆரம்பித்து மறுபடியும் திமுக நிறைய பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றால் என்ன நடக்கும்? மூன்றாவது அணி வாய்ப்பில்லை! பாஜக நிச்சயம் சேர்த்துக் கொள்ளாது!  (எனனோட நம்பிக்கைதான்)கட்டு சோத்துக்குள் யாராவது பெருச்சாளியை கட்டுவார்களா? 

      அப்படியே ஆதரவளித்தால் பாஜக வும் சேர்ந்து தன் நம்பகத்தன்மையை இழந்து விடும்! (தமிழக பாஜக தலைவர்கள் பேசாமல் இருந்தால் இது சாத்தியம்!)
ஆக எப்படி பார்த்தாலும் சனி பகவான் திமுக விற்காக ஸ்பெஷல் ரெப்ரஸென்டேடிவ்களை அப்பாயிண்மென்ட் பண்ணியிருப்பதாகத் தான் தோன்றுகிறது! ஆனால் நாம் நினைப்பது போல் எதுவும் நடப்பதில்லை! ஒரு வேளை ரிசல்ட் மாறிவிட்டால்.........அதற்கும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது! ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்!


       மாங்காய் 1. தமிழகத்தில் பாஜக நிற்கும் ஆறு சீட்டுகளிலும் பாஜக வை வெற்றி பெறச் செய்யலாம் அல்லது நாற்பதிலும் அதிமுக வெற்றி பெறவேண்டும்.
மாங்காய் 2. பாஜக ஆறில் வென்றால் மற்ற முப்பத்து நான்கு தொகுதியிலும் அதிமுக வை வெற்றி பெற செய்ய வேண்டும்
மாங்காய் 3.
காங்கிரஸ்(ஊழல்,  ஈழத்தமிழர்களை கொன்றது), திமுக(ஊழல், ஈழதுரோகம், தமிழக துரோகம்), பாமக(ஜாதிவெறி), விசிக(ஜாதிவெறி, ) தேமுதிக(நிர்வாகம் தெரியாத குடிகாரர்கள்),
வைகோ(பாவம், கூடாநட்பு) மற்றும் சாதிக்கட்சிகள், சந்தர்ப்பவாத கூட்டணிகள் அனைவரையும் கூண்டோடு புறக்கணிக்க இதுதான் வழி!  அதுதான் நல்லதும் கூட!


       ஜெயலலிதா வந்தால் நிர்வாகம் ஓஹோ என்று சொல்லாவிடினும் ஓரளவு ஒழுங்காய் நடக்கும்! சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும்!
தவிர முதுகெலும்பு இல்லாமல் பதவிக்காகவும், பணத்துக்காகவும் அடுத்தவர் காலில் விழுந்து தன் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக் கொள்ளும் தலைவர்கள் மத்தியில் பொளேரென்று கன்னத்தில் அறைந்தது போல் விஷயத்தை முடிக்கும் ஆண்மையும், நேர்மையும் ஜெயலலிதாவின் இயல்பு என்பதால் அவரைத் தவிர தமிழர்களுக்கு தற்போது வேறு சாய்ஸ் இல்லை என்பது நிதர்சனம்!