வியாழன், 20 மார்ச், 2014

வைகோ ஏன் வெல்ல வேண்டும்.



தமிழ் உறவுக்கு வணக்கம்...

சகோதரா அரசியல் சார்ந்த பதிவே.... படித்த இளைய தமிழ் தலைமுறை நோக்கி .. இந்த பதிவை முழுவதும் படிப்பீர்கள் என நினைக்கிறேன் ..

வைகோ வெற்றிக்கு கை கொடுப்போம் ...

ஏனெனில்,

வைகோ ஸ்டெர்லைட் ஐ ஓட ஓட விரட்டுவார் ; ( அதிமுகவால் அனுமதிக்கப்பட்டு திமுகாவால் ஆதரிக்கப்பட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் )( அதனால் ஸ்டெர்லைட் முதலாளி துவத்தால் எதிர்க்கபடுகிறார்)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கூடங்குளம் மக்கள் நலனுக்காக போராடுகிறார் ( பிற மாநிலங்கள் வேண்டாம் என ஒதுக்கிய போதும் தமிழகத்தில் நிறுவிய அன்றைய காங்கிரசுக்கு எதிராக போராடுவதால் / ரசிய ஆதரவு முதலாளி துவத்தால் எதிர்க்க படுகிறார் );

"முல்லைபெரியார்" பிரச்சனைக்காக களத்தில் இறங்கி இருக்கிறார் ( கேரளா ஆதரவு முதலாளித்துவத்தால் எதிர்க்க படுகிறார் ) ;

மதுவை ஒழிக்க தமிழர்களை மதுவில் இருந்து காக்க தமிழக அரசுக்கு எதிராக மது ஒழிப்பு போராட்டம் நடத்துகிறார் ( மதுபான நிறுவன முதலாளித்துவத்தால் எதிர்க்க படுகிறார்)

டெல்டா விவசாயத்தை அழிக்க வரும் "மீதேன்" திட்டத்திற்கு எதிராக களத்தில் இருக்கிறார் (தனியாரின் முதலாளித்துவத்தால் எதிர்க்கபடுகிறார் );

தருமபுரி உள்ளிட்ட ஆறு மாவட்ட விவசாய நிலங்களை அபகரிக்க அமைக்கப்படும் கெயில் நிறுவனம் அமைக்கும் குழாய் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராடுவதால் ( கேரளா வழியாக செல்லும் திட்டத்தை கேரளா மக்கள் எதிர்த்ததால் தமிழக விவசாயிகள் தலையில் கட்டிய கெயில் நிறுவன முதலாளித்துவத்தால் எதிர்க்க படுகிறார் )

இன்று தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் வாதிகளும் அரசியலுக்காக கையிலெடுக்கும் ஈழ போராட்டத்தை உணர்வுபூர்வமாக ஈழ தமிழ் மக்கள் நலம் வேண்டி ஆரம்பத்தில் இருந்து ஒரே நேர்கோட்டில் போராடி வரும் உன்னத தலைவன்.
"தன்னிலை மாறாது, தன்னலம் கருதாது, ஈழத்திற்காக போராடுகிறார் ; ( அதனால் ராஜபக்சே முதலாளி துவத்தால் எதிர்க்கபடுகிறார்)

மூன்று தமிழர் விடுதலைக்காக அரசியல் காரணங்களுக்காக இன்று குரல் கொடுப்பவர்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டார் என்பதற்காக ...

சுற்றுசூழலுக்கு ஆதரவாக போராடுகிறார் என்பதற்காக ;

இவை எல்லாவற்றிற்கும் மேலாக , "மக்கள் தலைவன்" , யாரிடமும் விலை போகவில்லை ( அரசியல் காரணங்களுக்காக பல பொய் கதைகள் புனையப்பட்டு அது பின் பொய்யாக்க பட்டுள்ளது ) ;

ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் , தனது வாதத்தால் , தலை தாழ செய்த தமிழன் ..

மொத்தத்தில், தமிழுக்காக , தமிழ் இனத்திற்காக, தமிழர் நலனுக்காக போராடுகிறான், எத்தனை எத்தனை சோதனைகள் வந்தாலும்...

பதவி இல்லாதபோதே இப்படி போராடுகிறான் என்றால் , "பதவிக்கு வந்தால் அவனை எதிர்கொள்ள முடியாது என பிற மாநிலத்தவர் பிற நாட்டவர் நினைக்கும் போக்கே நமக்கு அவர் எவ்வளவு தேவையானவர் என உணரவைக்கும் ;

மக்களுக்காக போராடும் தலைவன் ... ஊழல் கரை படியாதவன் ... சாதி மதம் அப்பாற்பட்டவன்... அவனை எதிர்க்க மற்ற கட்சிகளுக்கு கிடைத்த ஒரே குறை "கூட்டணி "... மாற்றி மாற்றி கூட்டணி வைத்தார் .. அவர் நலனுக்காக இல்லை ... மாபெரும் மலைகளுக்கு இடையே கட்சியை காப்பதற்காக ... அதனால் அவரோ அவர் கட்சியை சார்ந்த எவரோ பயன் பெறவில்லை... பயன் பெற்றதெல்லாம் தமிழக மக்களும் கூட்டணி கட்சிகளும் தான் ...

பலன் பெற்ற பலர் ( அவர்களும் மாற்றி மாற்றி பல் கூட்டணி வைத்துள்ளனர் என மறந்து விட்டு ) அவரை கூட்டணி வைத்ததை குறை சொல்கின்றனர் ...

இப்படி ஒவ்வொரு முதலாளி துவ எதிர்ப்பை மீறி எமக்காக நமக்காக போராடி வருவதால் அவரை ஆதரிக்கிறேன் ...

அரசியல்வாதியாக பாராமல் ஒரு நிமிடம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பாருங்கள் அவரை ...

அவர் ஆதரவாளர்களாக அனைவரும் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை இந்த பதிவு .... ஆனால் இந்த காரணங்களால் படித்த் பின் ஒருமுறை சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...

படைப்பு:-முரளிதரன் சுந்தரராஜ் கலிங்கப்பட்டி

=====================
=====================
இதனை ஒட்டையோ / வெட்டியோ தங்களுக்கு கருத்துக்கள் இருப்பின் எழுதி k.murugaboopathy@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோ\ம். -கு.முருகபூபது-9865046197.