வியாழன், 23 ஜனவரி, 2014

கண்டேன் கவர்னரை...




Blogger திண்டுக்கல் தனபாலன் said...
வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மேற்கண்ட மின்னஞ்சல் கண்டு எனது மன ஓட்டம்... அய்யா சாமீ நா அந்த அளவுக்கு ஒர்த்து இல்லை... நீங்க நினைக்கர மாதிரி...
==========================================
==========================================
சென்னை:

பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெறும் ஆலைய விழாவில் மேதகு தமிழக ஆளுனர் ரோசய்யா அவர்கள் பங்கேற்கிறார் என அறிந்து கவர்னரை காண ஆவல் கொண்டேன்.




 ’Z’ பிரிவு பாதுகாப்பு வளையம் படிப்படியாக நமது உடமைகளை பின்னர் தருவதாகக் கூறி பறித்துக் கொண்டது. (அலைபேசி, புகைப் படக்கருவிமடிக்கணினி)




நிகழ்வில் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் பார்வையாளர்களின் கை தட்டலை அதிக அளவில் அள்ளிச் சென்றவர் திரு.பழகருப்பைய்யா அவர்களே ஆவார்.





திரு.பழகருப்பைய்யா அவர்கள் தனது பேச்சில் விஸ்வகர்மா சமுகத்தினரை உயர்வாகப் பேசினார். காலஞ் சென்ற ஸ்தபதி கணபதி அவர்களிடம் தான் பள்ளி மாணவனாக இருந்து 8ம் & 9ம் வகுப்பில் கணக்குப் பாடம் பயின்றதாக நினைவு கூர்ந்தார்.




இயல், இசை, நாடக மன்றம் சார்பாக பழம் பெரும் நடிகை சச்சு அவர்கள் கலந்து கொண்டு மேதகு தமிழக ஆளுனர் ரோசய்யா அவர்களின் அருகே மேடையில் அமர்ந்து இருந்தார். (வெளியே வரும் போது கூட படம் எடுக்க இயலவில்லை)

திரு.பழகருப்பைய்யா அவர்கள் காரில் ஏறி விடை பெரும் தருவாயில் முக்கியமான பிரமுகர்கள் நினைவுப் பரிசு அளித்து மரியாதை செய்தார்கள்.  




பின் குறிப்பு: ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் உள்ளவர்களுக்கே அனுமதி என்ற நிலையில் ”வழிப்போக்கனாக வந்தேன் தங்கள் அனுமதி அளித்தால் உள்ளே போகிறேன்” என்ற நம்மை உற்று நோக்கி அலுவலக அடையாள அட்டையை நன்கு ஆராய்ந்து அனுமதி அளித்த மகளிர் காவல் அதிகாரிக்கு நன்றி..நன்றி.