ஈரோடு
மாவட்டம்,
சிவகிரியில் உள்ள நூலகர் திரு.பெரியசாமி
(படத்தில்
இருப்பவர்)
அவர்களோடு
நீண்ட நாட்களுக்குப் பிறகு
பேசும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது
சிவகிரி நூலகம் காலை எட்டு
மணி தொடங்கி இரவு எட்டு மணிவரை
இடைவேளை இன்றி முழுநேரம்
செயல்படத் தொடங்கி உள்ளதாகக்
கூறினார்.
சிவகிரியை
சுற்றி விவசாய மற்றும் நெசவு
உள்ளிட்ட பல்வேறு கூலித்
தொழிலாளர்களின் பிள்ளைகள்
நூலகக் கல்வி பெறவும்,
அதன்
தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு
பெறவும், பேரூராட்சி தலைவர் திரு. பரமு என்கிற ஆறுமுகம் அவர்கள் அரசிடம் தீவிரமாக முயற்சி செய்து இந்த நேர நீட்டிப்பு பெற்று
வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சிவகிரி அருகில்
உள்ள காரவலசை சேர்ந்த ஏழை
மாணவி ஒருவர்,
இடைவிடாது
நூலகம் வந்து பொதுநூல்கள்
பயின்று வேலை வாய்ப்பும்
பெற்றுள்ளார் எனவும்,
ஒரு
நாள் அந்த மாணவியின் கல்வியறிவு
இல்லாத தாயார் நூலகம் ஏங்கே
உள்ளது என விசாரித்து வந்து
“அய்யா உங்களா தா என்ர மகளுக்கு
வேலை கெடச்சிரிக்கு அய்யா”
என அழுது கொண்டே தனது காலைத்
தொட்டுக் கும்பிட முயன்றார்
எனவும் கூறினார்.
நான் அவருக்கு நன்றி சொல்லி விடைபெறும்
தருவாயில் நீங்கள் நடத்தி வரும் ”நண்பர்கள் இலக்கிய வட்டம” சார்பாக ஏதாவது செய்து நூலக வாசகர்களின்
எண்ணிக்கை உயர ஆவண செய்யுங்கள் என்ற கோரிக்கையையும்
நம்மிடம் வைத்தார். நூலகர் எண்: 99657 64816.
அமைதியான
சூழல் நிறைந்த வேப்பமர நிழலில்
அமைந்துள்ள புதிய நூலகக்
கட்டித்தில் பலப்பல நன்கொடையார்கள்
வழங்கிய மேசைகள்,
சொகுசு
நாற்காலிகள் மற்றும் அரசின்
புத்தம் புது புத்தகங்களும்
நம்மை வரவேற்க காத்திருக்கின்றன.
இனியாவது பயன்படுத்த நாம்
தயாராக வேண்டும்.
