ஞாயிறு, 8 டிசம்பர், 2013

உருவ ஒற்றுமை.

       
 என்னுடன் படத்தில் இருக்கும் அன்பரின்  பெயர் திரு.சேகர் ஆகும். ஆனால் இவரின் தோற்றமோ சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த எனது மாமனார் திரு.கண்ணன் அவர்களின் உருவ ஒற்றுமையில் உள்ளது. இவரின் குண நலன், உடல் மொழி, குரல் வளம், நடையுடை பாவனைகள் அச்சு அசலாக பொருந்துகின்றது. 
..



மறைந்த திரு.கண்ணன் அவர்கள் 1990 களில்... உறவினராக எனக்குள் வந்து மிகச் சிறந்த நண்பராக ஊடுருவி சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மறைந்து போனார். கிடைத்த ஓய்வு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவதில் அலாதிப் பிரியம் இருந்தது... இருவருக்கும். சில பல நாட்கள் வீட்டிற்கே வராமல்... மர நிழல் தூக்கம்,  வாய்கால் குளியல், தட்டுக் கடையில் உணவு என மிக சுவாரசியமாக நாட்கள் உருண்டன. 




படத்தில் இருக்கும் திரு.சேகர் அவர்களுடன் சென்னையில் இருந்த கடந்த பத்து நாட்களும் எனது மாமனார் மறைந்த திரு.கண்ணன் அவர்கள் என்னுடன் இருப்பதாகவே உணர்ந்தேன்.
.
 அந்த பசுமையான நாட்கள் மீண்டும் வராதா...?. யாரோடும் சந்தோசமா இருக்கலாம் பாஸ்... நிபந்தனைகள் ஏதும் இன்றி...! 
.

என்றும் அன்புடன்... கு.முருகபூபதி