ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வேடிக்கை

பரமகுடி ரயில் நிலையம்:
.
" பீ…பிரவின் குமார்ரூரூ ஏம் பேரூ… சந்துல சேகோரூ… எங்க தாத்தா பேரூஉ… ரயிலு பாக்க வந்தோம். இப்ப..இப்ப வரும் ரயிலு… குறுக்க போகக் கூடாது. ரயிலு வரும்… மணி சத்தம் கேட்டுச்சா… கொடி காத்துல பறந்துச்சா… குறுக்க போகக் கூடாது. ரயிலு வரும்… " என சுய அறிமுகம் செய்து கொண்டது மழலை.
.
" இவனுக்கு ரயிலுன்னா கொள்ள பிரியம் தம்பி… இதுக்குன்னே வாரா வாரம் கூட்டிகிட்டு வருவேன்… தேர் கடையிலே கூட ரயிலூ பொம்மை தான் கேட்பான்…
.
நாங்க உள்ளூர் தான்.... வேடிக்கை பாக்க தான் இங்கே வாறோம்... அதுக்காக டிக்கெட் இல்லாம எப்படி...? " என்ற பெரியவரின் பையில் சிரித்தது பிளாட்பார டிக்கெட்.
.