மலரும் நினைவுகள்
1993-ல் Lic பணியில் சேர்ந்த நாள் முதல் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கோவைக் கோட்டத்தின் சார்பாக நடைபெற்ற தனியார் மயமாக்களுக்கு ஏதிரான பல்வேறு தெரு நாடகக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிடைத்த வாய்பினை அங்கீகாரமாக் கருதுகிறேன். என்னை மென்மேலும் பட்டை திட்டி மேடையேற்றி ஒளிரச் செய்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். சங்கத்துக்குள் கிடைத்த அனுபவங்கள் என்னை இன்று பன்முகத் திறமையாளனாக பவனி வர வைத்துள்ளது.
இப் படங்கள் என்றும் நினைவில் நிலைத்திருப்பவை.







