மொட்டை மாடி நின்று
நீள் வானத்தின் மேகச்சிதறலை
அண்ணாந்து பார்க்கையில்
எப்போதாவது தெரியக்கூடும்
அம்மாவின் பழைய சேலை விரித்து
பிழிந்தெடுத்த கூழ் வடகமும்
கரம் பிடித்துப் பழக்கிய அம்மாவும்!
நன்றி
.
