மதிய நேர இரயில் பயணம். ”சமோசா… வாங்கலையோ… சமோசா…” என கூவிக்கொண்டே மூங்கில் கூடையில் அடுக்கிய சமோசாக்கலுடன் ஒருவர் நாங்கள் இருந்த பெட்டியில் எறினார். பயணிகளில் சிலர் விலை விசாரித்தனர். 10 ரூபாய்க்கு மூன்று என விலை கூறினார். பேரம் தொடங்கியது”10 ரூபாய்க்கு நாலு கொடுக்கலாம் கொடுங்க…!.” விற்பனையாளறோ ”கட்டுபடி ஆகாதும்மா!. எண்ணை விலை எறி விட்டது. சென்ற மாதம் வரை 10 ரூபாய்க்கு நாலு கொடுதேன். இப்ப வராது தாயீ” என்றார்.
பசி நேரம் என்பதாலும்,
உணவு கிடைக்க உள்ள இரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணி நேரம் பிடிக்கும் என்பதாலும், சுமார் 20% பயணிகள் 10 ரூபாய்க்கு மூன்று என்ற விலைக்கே வாங்கினார்கள். பலரும் விலை அதிகம்
என்றும் 10 ரூபாய்க்கு நாலு என்றால் பரவாயில்லை என முணுமுணுத்துக் கொண்டே வாங்கவில்லை.
சுமார் அறை மணி நேர பயணத்திற்குப்
பிறகு தலையில் துண்டு கட்டிய புதிய விற்பனையாளரின் குரல் ”10 ரூபாய்க்கு நாலு சமோசா…” இரயில் பெட்டியில் இருந்த அனைவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தற்போது வந்த சமோசா சூடாகவும் அதனோடு நீளமான
பச்சை மிளகாய் ஒன்றும் கிடைத்தது. இம்முறை பேரம் ஏதும் இன்றி சுமார் 80% பயணிகள் சமோசா வாங்கி உண்டார்கள்.
மீண்டும் ஒரு மணிநேர பயணத்திற்குப்
பிறகு புதிய பெண்மணியின் குரல் ” 10 ரூபாய்க்கு 5 சமோசா…” பயணித்த அனைவரின் இரத்தமும் சூடேறி விட்டது. இதுவரை சமோசா வாங்காமல் இருந்தவர்கள்
திடீர் புத்திசாலியானர்கள். அவர்களின் பார்வை எங்களை ஏமாளி என்று சொல்வதாக இருந்தது.
இம்முறை சமோசா + பச்சை
மிளகாய்+ வெங்காயம் கிடைத்தது. விற்க வந்த பெண்மணியோ “ சுய விளக்கமாக; அருகில் இருந்த கோவில் திருவிழாவில் விற்க அதிக அளவில் சமோசா தயாரித்ததாகவும், மழை வந்து விற்பனை மந்தமாகி
விட்டதால் மிதமிருந்த சமோசாவை விற்பனை செய்ய இரயிலுக்கு வந்ததாகவும் கூறிக் கொண்டே அனைத்து சமோசக்களையும் விற்று கூடையை காலி செய்து விட்டார்.
இரவு வீட்டுக்கு வந்த
உடன் இருப்பு கொள்ளாமல் வீட்டம்மாவிடம் நடந்தைக் கூறினேன். ”நீங்க 10+10+10=30 ரூபாய்க்கு
மூன்று பேரிடமும் சமோசா வாங்கி இருப்பீர்களே…!” என்றார். {எப்படி அவ்வளவு கரெக்டா சொல்ல
முடியுது!?.} இன்று இரயிலில் சமோசா
விற்க வந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பதைச் சேர்ந்தவர்கள்” என வீட்டம்மா உறுதியாக கூறினார்.
ஒரே குடும்பதைச் சேர்ந்த மூவரும் 3+4+5 =12 / 30 = ஆக சராசரியாக 10 ரூபாய்க்கு நாலு சமோசா விற்பனை செய்து உள்ளார்கள். சாமோசாக்களை உடனடியாக விற்க நூதனமான விற்பனை யுத்தியை அவர்கள் பயன் படுத்தியுள்ளார்கள்.
ஒரே குடும்பதைச் சேர்ந்த மூவரும் 3+4+5 =12 / 30 = ஆக சராசரியாக 10 ரூபாய்க்கு நாலு சமோசா விற்பனை செய்து உள்ளார்கள். சாமோசாக்களை உடனடியாக விற்க நூதனமான விற்பனை யுத்தியை அவர்கள் பயன் படுத்தியுள்ளார்கள்.
அதோடு சென்னை முதல் ஈரோடு
வரை கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததாக எந்த பேப்பரிலும் செய்திகள் இல்லை. உண்மையிலேயே
கோவில் திருவிழாவுக்கு என சமோசா தயாரித்து அது மிதமாகி இருந்தால் ஆறிப்போய் இருந்து
இருக்குமே!. என வீட்டம்மா கேள்விகளை அடுக்கினார்.
இதைக் கேட்ட எனக்கு நாம ஆணியே புடுங்காம
இருந்திருக்கலாமோன்னு தோணுச்சு பாஸ்!. ஆமா MBA படிச்சா தான் மார்கெட்டிங் அறிவு வருமுன்னு
சொல்லறங்களே…பாஸ் அது பொய்யா… பாஸ்?.
-கு.முருகபூபதி.

