பொள்ளாச்சியில் இருந்து குடும்பத்துடன் டாப்சிலிப் சுற்றிப் பார்க்கலாம் என காலை 6 மணி பேருந்தில் பயணமானோம்.
நம் குடும்பம் வழக்கம் போல் லூட்டியைத்
தொடங்கியது. நடத்துனரிடம் டாப்சிலிப் வரை டிக்கட் பெற்றோம்.
கொண்டைஊசி வளைவுகள் தொடங்கின. நமது லூட்டியும்
அதிகமாயின. நடத்துனரின் பார்வை நம் மீது அடிக்கடி விழுவதை உணர
முடிந்தது. நம்மை நோக்கி வரத் தொடங்கினார்.
நாம ஓவரா போயிட்டொமோ…
என உதறல்….அனைவரும் கப்சிப். ” சுற்றிப் பார்க்க டாப்சிலிப் பயணமா?. அப்படியானால் கூடுதலாக இன்னோரு இடத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். நடத்துனர் பெயர் திரு.பார்த்திபன். அண்ணாரின் யோசனைப்படி டாப்சிலிப் தாண்டி ஆனப்படி என்ற இடத்தில் இறங்கினோம்.
டாப்சிலிப் தமிழக
எல்லையிலும், ஆனப்படி கேரளா எல்லையிலும் அமைந்துள்ளன.
தேக்கு மரங்கள் அடர்த்தியாகவும், கம்பீரமாகவும்
கண்களுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளன. சுற்றுலா பயணிகளை அடர்ந்த
வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல பாதுகாப்பான கேரளா அரசின் வாகனங்கள் உள்ளன. சுமார் மூன்று மணி நேரம் அடர்ந்த காட்டுக்குள் பயணிக்க கட்டணம் சுமார்
200/- ஆகும்.
இயற்கை அன்னை வாரி வழங்கிய அழகியலைக்
காண ரம்மியமாக உள்ளது. பயணத்தின் போது காட்டுக்குள் நமது முன்னோர் உள்ளிட்ட
சில பல காட்டு ஜீவராசிகளைக் காண முடிகிறது. தொலைக்காட்சில் மட்டுமே
கண்டு வந்த அடர்ந்த காட்டை குடும்பத்திற்கு பாதுகாப்பாக காட்ட சரியான வாய்ப்பு என பயணத்தின்
போது தெரிந்து கொண்டோம்.
சுமார் 500 ஆண்டுகள் பழமையான தேக்கு மரமே கன்னி மரம் எனப் போற்றப் படுகிறது. சுமார் 10 நபர்கள் கைகளைக் கோர்த்து மரத்தை அணைத்த படி வட்டமாக நிற்கலாம். மரம் அந்த அளவுக்குப் பெரியது. மரத்தைச் சுற்றிலும் கருங்கல் மேடை அமைத்து பராமரிக்கப்படுகிறது. கன்னி மரத்தின் இன்றைய பண மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் ஆகும்.
ஆதிகால மனிதன் இயற்கையை வழிபட்டான் என்பதற்கு நம் கண் முன் சான்றாக கன்னி மரம் இருப்பதாக கூறுகிறார்கள்.
-கு.முருகபூபதி
.jpg)


.jpg)
.jpg)