ஓங்காரமாய் ஓங்கி எழும் அலைகளுக்கிடையில் மீனவ நண்பர்கள் சிலர் கடலுக்குள் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களிடம் வழிப்போக்கர் ஒருவர் வந்து தன்னை நடுக்கடலில் தெரிகின்ற மொட்டை பாறையில் விடும் படி கேட்டார். யோசித்த மீனவர்கள் கூலியாக காலணா காசு வேண்டும் எனக் கேட்டார்கள். ஆனால்
காலணாவுக்கு கூட வழி இல்லாமல் வழிப்போக்கர் கைகளை பிசைந்தார். திரும்பிப் போய்விடுவார் என மீனவர்கள் நினைத்தனர். ஆனால், வழிப்போக்கர் வானத்தைப் பார்த்து சிரித்தவாறே கடலில் குதித்தார். துரிதமாக நீந்தி தான் விரும்பிய பாறையை அடைந்தார்.
தங்களின் யூகம் சரியானதே!. இது விவேகானந்தர் கதை. ஒரு மாலை நேர உலாவின் போது இக்கதையை எனது மகனோடு பகிர்ந்து கொண்டேன். சுவாரசியம் கதையில் இருந்ததை விட அவன் கேட்ட கேள்விக் கணைகளில் இருந்தன.
”நரேந்திரன் என்பவர் எப்படி விவேகானந்தர் ஆனார்?”.
என்ற முதல் வினாவுக்கு எனது விடையாக
”நரேந்திரன் தனது வளர்ச்சிக்காக பிறரைச் சார்ந்து இருந்தார். அதாவது மீனவர்கள் தன்னைக் கொண்டு போய் நடுக்கடலில் உள்ள தான் விரும்பிய பாறையில் விட வேண்டும் என எதிர் பார்த்தார் உதாரணமாக,
நம்மில் பலர் நினைப்பது போல்…
தமது லட்சியத்தை அடைய…
தமது விருப்பம் போல்…
தமது விருப்பம் போல்…
1 அப்பா செய்வார்…!
2 அம்மா செய்வார்…!
3 ஆசிரியர் செய்வார்…!
4 கல்லூரியில் செய்வார்கள்…!
5 தெருவில் உள்ளவர்கள் செய்வார்கள்…!
என அடுத்தவர்களை நம்பிக் கொண்டு இருந்தார்.
அந்த வினாடி வரை பிறரைச் சார்ந்து இருந்த நரேந்திரன், தன் கையே தனக்கு உதவி என முடிவு செய்தார்.
அவர் சுயமாக செயல் படத் தொடங்கி கடலில் குதித்த அந்த கணத்தில் இருந்து நரேந்திரன் என்ற மிகச்சதாரண சராசரி மனிதன் காணமல் போனான். அவருக்குள் இருந்த மகா சக்தி ஞானமாக வெளிப்பட்டது. பின்னர் விவேகானந்தராக உயர்ந்தார்” என முடித்தேன்.
ஆனால் என் மகன் தொடங்கினான்…!.
”காசே இல்லாதவர் சாமியாரா…? அப்படின்னா, விவேகானந்தர் நிஜமாவே சாமியாரா...?. சப்போஸ், காசு இருந்து இருந்தா…?. விவேகானந்தர் சாமியாராவே ஆகி இருக்க மாட்டாராப்பா…?.” எனக் கேட்டான். எனக்கு பதில் சொல்லத் தெரியலை.
காலேஜ் போற புள்ளைய அப்பாவின்னு நெனச்சி கதையை கொஞ்சம் நீட்டி தெனாவெட்டா சொல்லி மாட்டிக்கிட்டேன். யாராவது பதில் சொல்லி என்னை காப்பாத்துங்க…!?.
நன்றி.
கு.முருகபூபதி
கு.முருகபூபதி




