வெள்ளி, 3 மே, 2013

கல்லெறியும் தூரத்தில் கலெக்டர் வேலை!.


முயன்றால் முன்னேறலாமென்று
போகிற போக்கில் வீசிவிட்டுப் போனார்கள
பொறியை-எனக்குள்
திக்கென்று பற்றிக் கொண்டது


முடியுமென்றால்…?
விவசாயம் செய்து வித்தகன்
ஆகலாமா?
ஓட்டமாய் ஓடி ஒலிம்பிக்கில் வெல்லலாமா?
விண்ணில் பறக்கும் விஞ்ஞானி ஆகலாமா?
கவிதைகள் புனையும் கவிஞன் ஆகலாமா?


வருகைப் பதிவேட்டில் ரேகை பதித்து
நூலக நூலில் பொம்மை பார்க்கலானேன்.
“கைநாட்டுப் பேர்வழிக்கு இங்கென்ன வேலை?”
பார்வையில் கேட்டோருக்கு பதிலில்லை என்னிடம்.


மூவெட்டு வயசுல படிப்பு எதற்கு?.
நக்கலாய்க் கேட்டது நட்பு வட்டம்.
”டோய்... வழி விடுங்கடோய்... இனிமே
அண்ணன் படிச்சு கலெக்டர் ஆகப் போறாராம்”
நையாண்டி செய்தது சிறார் வட்டம்.


இலக்கை நோக்கி உக்கரமாய் போராட
வெற்றிக்கு வித்திட்டு
விட்டுக் கொடுத்தாள் சரஸ்வதி – பரிசாக
எல்.ஜ.சி. வேலையும் தந்தாள்.


முடியும் என்ற பொறியை தீயாக்கி
உயரிய எண்ணங்களை ஏணியில் ஏற்றி
சிந்தையை கூர்மையாக்கினால்…? - உங்களுக்கு...
கல்லெறியும் தூரத்தில் கலெக்டர் வேலை – ஆம்
கல்லெறியும் தூரம் தான்.
.கு.முருகபூபதி