லைட்ஸ்... கேமரா... டேக்.... ஆக்சன்....!!
அன்புசால் பெருந்தகையீர். வணக்கம். எனது மகன் தினேஸ்குமார் EBET கல்லூரியில் BE முதலாம் ஆண்டில் படிக்கிறான். அவனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய குறும்படத்தை தங்களோடு பகிர்கிறேன்.
இந்த குறும்படம் உருவாக்க அனுமதி அளித்தது வழிகாட்டிய EBET கல்லூரி நிர்வாகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
.
எனது மகன் தினேஸ்குமார் குழுவினரின் படைப்பில் உருவாகியுள்ள குறும்படம் “அய்யோ அரியர்ஸ்” பைசா செலவில்லாமல், வெளி நபர்களின் எந்த விதமான தொழில்நுட்ப உதவியையும் பெறாமல், குடும்பத்தில் உள்ள எங்களையும் எந்த தொந்தரவு செய்யாமல் கம்பீரமாக வளர்ந்துள்ளது.
வீட்டில் இருந்த மிகச் சிறிய கேமரா இந்த அளவுக்கு படமெடுக்கும் திறன் வாய்ந்தது என இன்று தான் புரிந்தது. அதோடு இசை,எடிட்டிங்,டப்பிங் உள்ளீட்ட அனைத்துப் பணிகளுக்கும் மடிக்கணனியே பயன்படுத்தப்பட்டது. ஒரு சிறந்த படக் குழுவினருக்கு சில நாட்கள் உணவு உபசரிக்கும் வாய்ப்பு கிடைத்தமை மிகுந்த மனத் திருப்தியை அளிக்கிறது.
படம் காண இங்கே கிளிக் செய்யவும்.

