வாரம் ஒரு கோவில்
இன்று திருநாகேஸ்வரம்
நாகநாதசுவாமி திருக்கோயில்
மூலவர் -நாகநாதர்
தாயார் -பிறையணி வானுதலாள்
தல விருட்சம் -செண்பகம்
தீர்த்தம் -சூரிய புஷ்கரணி
நாகநாதசுவாமி திருக்கோயில்
மூலவர் -நாகநாதர்
தாயார் -பிறையணி வானுதலாள்
தல விருட்சம் -செண்பகம்
தீர்த்தம் -சூரிய புஷ்கரணி
சுசீல முனிவரின் மகன் சுகர்மன்
வனத்தில் செல்லும்போது
நாக அரசன் தக்கன் அவனை
தீண்டிவிட கோபமடைந்த முனிவர் தக்கனை பூலோகத்தில் மானிடனாக
பிறக்க சாபமிட்டார்.
தக்கன் காசிபமுனிவரிடம் விமோசனம் வேண்ட அவர்
பூலோகத்தில் செண்பகாரண்யத்தில்(திருநாகேஸ்வரம் )சிவபூசை செய் என கூற அப்படியே செய்த தக்கன் பக்தியில் மகிந்த ஈசன் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார் .நாக அரசனுக்கு அருளியதால் நாகநாதர் என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாக கோயில் கொண்டுள்ளார் .

இது ராகு பரிகார ஸ்தலமாக உள்ளது .ஒரு சிவராத்திரி அன்று ராகுவுக்கு ஈசன் காட்சிதந்து அருளினார் .இங்கு ராகு தன் மனைவியருடன் மங்களராகுவாக காட்சிதருகிறார். மனித தலையும் பாம்பு உடலுடன் காணப்படும் ராகு இங்கே மனித உருவில் தனி சன்னிதியில் உள்ளது தனிச்சிறப்பு .ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து ராகு தோஷநிவர்த்தி செய்கின்றனர்.அப்போது பால் கண்டத்தில் நீல நிறத்தில் தெரிவது கலியுக அதிசயம்.
மேலும் இங்கு தனிசன்னிதியில் அன்னை கிரிகுஜாம்பாள் லஷ்மி சரஸ்வதியுடன் பிருங்கி முனிவருக்கு காட்சியளிக்கும் திரிசக்தி கோலத்தில் உள்ளனர். கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் 5நிமிடத்திற்கு ஒரு பஸ் வசதியுடன் உள்ளது
திருநாகேஸ்வரம் .கோவிலின் அருகிலேயே தங்கும் விடுதிகள் குறைந்த கட்டணத்தில் உள்ளன. கோவிலின் அருகில் புகழ்பெற்ற உப்பிலியப்பன் கோவில் உள்ளது.
அனைவரும் சென்று நாகநாதர் ராகுபகவான் அன்னை திரிசக்தி அருள் பெறவும் .
திருச்சிற்றம்பலம்
அனைவரும் சென்று நாகநாதர் ராகுபகவான் அன்னை திரிசக்தி அருள் பெறவும் .
திருச்சிற்றம்பலம்