67 வது சுதந்திரவிழாவினை
சிறப்பிக்கின்ற வகையில் ஈரோடு - சென்னிமலையில்
கல்லூரி மணாக்கர்களுக்கான குறும்பட போட்டி
நடைபெற்றது. FB அசோசியேசன் என்ற அமைப்பினர் வெகு விமர்சியாக விழாவினை ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த பரிசளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பரிசு பெற வந்த ஒவ்வோருவரிடமும் தனிபட்ட முறையில் மகிழ்ச்சியாக பேசி கிடைத்த சில வினாடிகளைக் கூட வீணாக்காது ஊற்சாகம் ஊட்டிய பாங்கு நம்மைப் போன்ற புதிய பார்வையாளர்களையும் கவர்ந்தது.
FB அசோசியேசன் அமைப்பானது கடந்த
141414பல ஆண்டுகளாக பள்ளி சிறார்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதல், சீருடை வழங்குதல்,
ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு
சமுக சேவைகளைச் செய்து வருகின்றது. அதன் இன்னோரு பகுதியாக வளர் இளம் பருவ இளஞர்களைளின்
தனித் திறனை வளர்க்கும் விதமாக இலவச நடன பயற்சி அளித்தல் மற்றும் அரங்கேற்றம் செய்தல்
ஆகிய பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
இந்த அமைப்பை கட்டமைத்து, வளர்தெடுத்து, வழி நடத்தி வருகின்ற புதுமாப்பிள்ளையான திரு.அருண் அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுவோம்.
இந்த அமைப்பை கட்டமைத்து, வளர்தெடுத்து, வழி நடத்தி வருகின்ற புதுமாப்பிள்ளையான திரு.அருண் அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுவோம்.
இன்றைய நவீன தொழில் நுட்ப
வளர்ச்சிக்கு ஏற்ப குறும்பட போட்டி நடத்த வேண்டும் எனவும், அதில் கல்லூரி மணவர்கள்
மட்டும் பங்கேற்கச் செய்ய வேண்டும் எனவும் இந்த அமைப்பினர் சிந்தித்து இருப்பது காலத்திற்கேற்ற
பரிணாம வளர்ச்சியாகும்.
போட்டது நல்ல விதையானால்
பூமியைப் பிளந்து கொண்டு வரும் என்பார்கள். FB அசோசியேசன் போட்ட குறும்படம் என்னும் விதை வெண்
திரையை கிழித்துக் கொண்டு வந்தது சுமார் 60 குறும்படங்களாக… இவைகளை சீர் தூக்கி எடை போட குழு
அமைக்கப் பட்டது. அக்குழுவினர் வடிகட்டி வடிகட்டி முதல் மூன்று படங்களை தேர்வு செய்து
விழாவில் ஒளிபரப்பினார்கள்.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நிறைந்த மண்டபத்தில்
உள்ளே மற்றும் வெளியே இருந்தும் படம் பார்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஒளிபரப்பான படங்கள் மூன்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததால் கை தட்டல் அடங்க சில நிமிடங்கள்
ஆனது. அறிது… அறிது…ஒரு கலைஞனுக்கு மேடை கிடைத்தல், அதனினும் அறிது ரசனை மிகுந்த பார்வையாளர்கள் கிடைத்தல். இன்றைய யதார்த்தம் இவ்வாறு இருக்க.... யார் செய்த புண்ணியமோ FB அசோசியேசன் வாயிலாக இந்த வளர் இளம் பருவ இளஞர்களுக்கு இவை இரண்டும் மிகச் சுலபமாக
கிடைத்துள்ளது. ஆக இந்த அமைப்பை புடும்புப் பிடியாக பிடித்துக் கொள்வோர் உயர்வது திண்ணம்.
எனது மகன் தனது குழுவினருடன் உருவாக்கிய குறும்படம் ஈரோடு - சென்னிமலை FB அசோசியேசன் 15.08.2013 அன்று நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசினைப் பெற்றது. அப் படத்தினைக் காண தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மு.தினேஸ்குமார் (BE II Year in EBET)
எனது மகன் தனது குழுவினருடன் உருவாக்கிய குறும்படம் ஈரோடு - சென்னிமலை FB அசோசியேசன் 15.08.2013 அன்று நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசினைப் பெற்றது. அப் படத்தினைக் காண தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மு.தினேஸ்குமார் (BE II Year in EBET)
